பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரத்தானதா?- ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

 
பரந்தூர் விமான நிலையம்:  பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட  மக்கள் பேரணி.. 

பரந்தூர் திட்டம் ரத்தானதா? என இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) இதற்கான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Image


பரந்தூர் திட்டம் கைவிடப்படுவது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறைக்கும், விமான நிலைய ஆணையத்திற்கும் தமிழக அரசு அனுப்பிய கடிதங்களின் நகல் கேட்கப்பட்டது. ஆனால் அது தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 8(1)(a)-ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையின் 2-வது விமான நிலைய பணி தொடங்கியதா? என்ற கேள்விக்கு ஆம் என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. பரந்தூர் திட்டம் ரத்தான நிலையில், சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய இடம் எங்கே? என்ற கேள்விக்கு புதிய விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்கப்பட்டதற்கு, இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னைக்கான 2-வது விமான நிலையத்திற்கு மாற்று இடம் தேர்வு பணிகள் தொடங்கியுள்ளதாக RTI பதில் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் புதிய இடம் இன்னும் முடிவாகவில்லை, தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதங்களை வழங்க RTI-யில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.