அமித்ஷா - விஜய் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டதா..? நடந்தது என்ன..?
தமிழக முதலமைச்சர் விஜய், அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகவும், ஆனால் அமித் ஷா அதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்றும் முதலில் தகவல்கள் பரவின.
நடந்தது என்ன..?
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான முதலமைச்சர் விஜய்யின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.நேற்று மாலை 6.45 மணிக்கு சந்திப்பு நடைபெற இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டிருந்தார். ஆனால் நேரம் ஒதுக்கவில்லை, அதேநேரம் ரத்து செய்யவும் இல்லை. அமித்ஷா குஜராத் செல்வதால் இன்றும் சந்திக்க வாய்ப்பில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?
முதல்வர் விஜய் தரப்பில் இருந்து சந்திப்பிற்கான நேரம் கேட்கப்பட்டது உண்மைதான். ஆனால், அமித்ஷாவின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குஜராத் பயண அட்டவணையால் இதற்கான நேரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிரதமர் மோடியை முதல்வர் விஜய் ஏற்கனவே சந்தித்துப் பேசியுள்ள நிலையில், அமித்ஷாவுடனான சந்திப்பு தள்ளிப் போயிருப்பது தமிழக அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

