"யாருடனும் கூட்டணி பற்றி மறைமுகமாக பேசவில்லை" - தேமுதிக

 
tn

கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

dmdk

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது; மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நிர்வாகிகளிடம் பிரேமலதா விஜயகாந்த் கருத்து கேட்டதாக தெரிகிறது. 

premalatha
இந்நிலையில் தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது. மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு கூட்டணி பேச குழு அமைத்திடவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் திருமதி.அண்ணியார் அவர்களுக்கு வழங்கி இந்த கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.