‘மகள் பிறந்திருக்கிறாள்”- நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பதிவு
நடிகர் ஹரிஷ் கல்யாண்-நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் கடந்த 2022ம் ஆண்டில் தனது காதலியான நர்மதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 2ம் தேதியில் இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், “இன்று (02.03.2026) நானும் என் மனைவி நர்மதாவும் எங்கள் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தோம் என்ற அற்புதமான செய்தியைப் பகிர்ந்து கொள்ளுவதில் என் இதயம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. தாயும் மகளும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் இருக்கிறார்கள். இந்த அழகான புதிய அத்தியாயத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்கும்போது, எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பத்திரிகை மற்றும் ஊடகங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

