ஹரிநாடார் ஆஜர்படுத்தப்படுகிறார் - எழும்பூர் பகுதிகளில் போலீஸ் குவிப்பு

 
ஹ்

பெங்களூர் பரப்பனன அக்ரஹாரா சிறையில்  சிறையில் இருந்து ஹரிநாடாரை சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்து வருகின்றனர் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் . எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஹரி நாடார் . பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் ஹரி நாடார் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன . பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கட்ரமணி என்பவரிடம் 360 கோடி ரூபாய் கடன் பெற்று வாங்கி தருவதாக சொல்லி அதற்காக 7 கோடி ரூபாய் கமிஷனும் பெற்று ஆனால் சொன்னபடி பணத்தை வாங்கித் தராமல் மோசடி செய்திருக்கிறார்.

ஹ்ஹ்

 இந்த குற்றச்சாட்டை அடுத்து பெங்களூரு சிட்டி குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டில் மே மாதம் ஹரி நாடாரை கைது செய்து கர்நாடகா சிறையில் அடைத்துள்ளனர்.   இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்னொரு மோசடி வழக்கில் ஹரி நாடாரை கடந்த 27.2.2023 அன்று  கைது செய்திருக்கின்றனர்.

 கடந்த 2021 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இஸ்மாயில் சக்கராத் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் பஷீர் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருக்கின்றனர்.   அந்த புகாரில் கொரோனா ஊரடங்கில் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் அதை சரி செய்ய வங்கியில் 100 கோடி ரூபாய் கடன் பெற முயற்சித்துக் கொண்டிருந்தோம்.   அப்போது பனங்காட்டுப்படை ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் வங்கியில் கடன் பெற்று தருவதாக சொல்லி உறுதியளித்துள்ளார்.   

 இதற்காக ஒன்றரை கோடி ரூபாய் கமிஷனாக பணம் பெற்றுக்கொண்டார்.   ஆனால் சொன்னபடி பணத்தை வாங்கி கொடுக்கவில்லை . மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

 இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மத்திய குற்ற பிரிவு போலீசார் ஹரி நாடார் மீது மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.  ஏற்கனவே கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து வந்தனர்.   இதற்காக பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் கைது ஆணையை முறையாக காட்டி அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்துவரும் பணியில் தீவிரமாக இருந்தனர்.

இந்த நிலையில்,  பெங்களூருவில் பரப்பன அக்கன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஹரி நாடாரை மத்திய குற்ற பிரிவு போலீசார் இன்று மதியம் தமிழகத்திற்கு அழைத்து வந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.   ஆய்வாளர் பிரசித் தீபா தலைமையிலான சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா  மத்திய சிறையில் விசாரணையை கைதியாக அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடாரை மதியம் 2:30 மணியளவில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்துகின்றார்கள்.   இதை முன்னிட்டு எழும்பூர் நீதிமன்றங்களின் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.