ஜெம் வீரமணி வழக்கில் நடந்தது என்ன? - புகார் அளித்த ஹரிஹரன் கூறும் பகீர் தகவல்

 
ஜெம் வீரமணி வழக்கில் நடந்தது என்ன? - புகார் அளித்த ஹரிஹரன் கூறும் பகீர் தகவல்

பெண்கள் பாதுகாப்பு & குழந்தைகள் நலன் குறித்த தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இந்த ஹரிஹரன் தான் முதலில் பென்டிரைவை கைப்பற்றி காவல் துறைக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் ஜெம் வீரமணி வழக்கில் நடந்தது என்ன என்பது குறித்து ஹரிஹரன் கூறுகையில், “2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி எங்கள் நிறுவனத்திற்கு பென்டிரைவ் கிடைத்தது. அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீரமணியின் 20 நிமிட வீடியோ இருந்தது. குற்றவாளி சாந்தி, வீரமணி என்ற நோட் அதில் இருந்தது. அதன்படி, 12 வயதான சிறுமியை வீரமணி வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அந்த பென்டிரைவை காவல் உதவி ஆணையரிடம் அளித்தோம். உதவி ஆணையர் அறிவுறுத்தலின்பேரில் புகார் கொடுத்தேன். இதுபோன்ற வழக்கில் காவல்துறை ஒரு சதவீதம் மட்டுமே உதவி செய்கிறார்கள். இதற்கு முந்தைய ஆட்சியில் எந்த உதவியும் செய்யவில்லை. நிறைய வீடியோக்கள் இருப்பதாக கூறுவது என்பது கற்பனை. புகார் கொடுத்த மறுநாளே FIR பதிவு செய்யப்பட்டத். ஆனால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏன் என இப்போதுதான் தெரியவந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் வாங்கி, வழக்கை மூடி மறைக்க பார்த்ததால் தாமதம் ஏற்பட்டது.

வீரமணியின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி வேண்டும். குழந்தைகள் நலனுக்காக பின் தங்கிய மாநிலங்கள் பணம் செலவழிக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் குழந்தைகள் நல அமைப்பு பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகின்றன. வீரமணி வழக்கை விசாரிக்க, விசாரிக்க நிறைய உண்மைகள் வெளியே வரும். பண திமிரில் வீரமணி போன்று செயல்படும் நிறைய ஆட்களை தடுக்க வேண்டும். பணத்தால் எதுவும் செய்யலாம் என நினைப்பவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். பவர்புல்லான காவல்துறை ஒரே வாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகுதான் குற்றவாளியை கண்டுபிடித்திருக்கிறார்கள்” என்றார்.