சென்னையில் மீண்டும் துவங்கியது 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி

 
ஹேப்பி ஸ்ட்ரீட் அண்ணாநகர்

சென்னையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி மீண்டும் துவங்கியது.

Image

ஞாயிறு தோறும் சென்னையில் தொடங்கிய ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடர்ந்து கோவை, திருச்சி ஆகிய பெரு நகரங்களில் நடைபெற்றது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு பின்னர் சென்னையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி மீண்டும் துவங்கியது. அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியால் அண்ணாநகரில் 2வது நிழல்சாலை பகுதியில் காலை 9 மணி வரை போக்குவத்துக்கு தடை ஏற்பட்டது. அடுத்த ஒரு மாத காலத்துக்கு ஞாயிறுதோறும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.