பத்திரிகையாளர் தினம் - தினகரன் வாழ்த்து!!

 
TTV

இந்திய நாட்டின் நான்காவது தூண் என்று புகழப்படுபவை  ஊடகங்கள். அந்த வகையில் தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16ஆம் தேதி  தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

ttn

இந்த நாளானது இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பானதாக பத்திரிக்கைத்துறை இருப்பதை குறிப்பதுடன்,  தொடர்ந்து அறம் தவறாது  தங்கள் பணிகளை திறம்பட செய்ய வழிவகுக்கும் வகையில் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணியினையும், சேவையையும் பாராட்டும் வகையிலேயே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ttn

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , உலகமெங்கும் எந்த சூழலிலும் பாகுபாடின்றி செய்திகளையும், புகைப்படங்களையும் சேகரித்து நாட்டுமக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் எனது தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

மழை, புயல், வெள்ளம், வெயில், போர் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பற்ற சூழலிலும்  மக்களுக்காக களத்தில் நிற்பவர்களை கொண்டாடும் நாளாக மட்டுமல்லாமல் பத்திரிகை சுதந்திரத்தையும், சமூகத்தின் மீதான பத்திரிகைகளின் பொறுப்புக்களையும் உணர்த்தக் கூடிய நாளாகவும் இந்நாள் அமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.