பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்! சிலிண்டர் விலை குறைப்பு..!

 
1 1

மே 1 தொழிலாளர் தினத்தன்று, 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.14.5 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. இந்த விலை குறைப்புக்குப் பிறகு மே 1 முதல் டெல்லியில் வணிக சிலிண்டர் விலை ரூ. 1747.50 ஆக உள்ளது. முன்னதாக, அங்கு சிலிண்டர் விலை ரூ. 1762 ஆக இருந்தது.

அதேபோல, கொல்கத்தாவில் சிலிண்டரின் விலை ரூ. 17 குறைந்து ரூ.1851.50 ஆக உள்ளது. இது தவிர, மும்பையில், ரூ.1713.50க்கு பதிலாக இனி 1699 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம். சென்னையில், இந்த சிலிண்டர் இப்போது ரூ.1921.50க்கு பதிலாக ரூ.1906க்கு கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் காலை 6 மணிக்கு சிலிண்டர் விலையை மாற்றுகின்றன. ஆனால் இந்த முறை இந்த மாற்றம் காலை 7.30 மணியளவில் செய்யப்பட்டது.

வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதியே சிலிண்டர் விலையைக் குறைத்திருந்தன. டெல்லியில், வீட்டு உபயோக சிலிண்டர் ரூ. 853க்கு கிடைக்கிறது. இது தவிர, கொல்கத்தாவில் ரூ. 879க்கும், மும்பையில் ரூ. 852க்கும், சென்னையில் ரூ. 868.50க்கும் கிடைக்கிறது.