பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம் - ஈபிஎஸ் வாழ்த்து

 
ep

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி  ஈபிஎஸ்  நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

இன்று மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

tn

நிமிர்ந்த நன்னடை,
நேர்கொண்ட பார்வை,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்,
திமிர்ந்த ஞானச்செருக்கு
என்று ஒரு நூற்றாண்டுக்கு முன், 
பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது.பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்!
பெண்மையை வணங்குவோம்!
பெண்மையால் பெருமை கொள்வோம்!

மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளை
மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.