"என் அன்பானவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!" - நடிகர் தினேஷுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுப் பரப்பரப்பைக் கிளப்பிய எழிலரசி!

 
1

நடிகர் ‘அட்டக்கத்தி’ தினேஷ், ‘லப்பர் பந்து’ பட வெற்றிக்குப் பிறகு, ‘வேட்டுவம்’ படத்தையும் முடித்துள்ளார். தற்போது 26வது படமான ‘பந்தா கேங்ஸ்’-ல் நடித்து வருகிறார். இந்நிலையில், தொகுப்பாளினி விஜே எழிலரசி, நடிகர் தினேஷை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். “என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணங்கள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நான் உங்களை மட்டும்தான் தேர்ந்தெடுப்பேன்” என்று எழிலரசி பதிவிட்டுள்ளார்.

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் விஜே-வான எழிலரசி, நடிகர் தினேஷுடன் தான் காதலில் இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு விஜே எழிலரசி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,"என் அன்பானவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் உனக்கு சிறந்தது மட்டுமே நடக்க வாழ்த்துகிறேன். வாழ்க்கையின் அனைத்து ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஏற்ற தாழ்வுகளிலும், நான் ஒவ்வொரு முறையும் உன்னை மட்டுமே தேர்ந்தெடுப்பேன். FYI -பெண்களே, தயவுசெய்து பாதுகாப்பான தூரத்தில் இருந்து மட்டுமே ரசியுங்கள், நன்றி. மேலும் கண்டிப்பான முறையில்..." எனப் பதிவிட்டுள்ளார். இப்பதிவின் மூலம் இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.