அனுமன் ஜெயந்தி- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1,00,008 வடைமாலை அணிவிப்பு!!

 
hanuman

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டது.

அஞ்சனை மைந்தன், வாயு புத்திரனின் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படும் அனுமன் பிறந்த நாள்தான் அனுமன் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.  ராமபிரானின் தீவிர பக்தரான அனுமன் வலிமை ,துணிச்சல், வீரம், புகழ் ,ஆரோக்கியம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர்.  ஐம்பூதங்களையும் தன்னுள் உள்ளடக்கி உள்ள அனுமன் ராமநாமத்தை தவிர வேறு எதற்கும் அடங்குவதில்லை என்று சொல்லப்படுவதுண்டு.  மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அனுமன் பிறந்துள்ளார். 

rr

அனுமன் ஜெயந்தி திருநாளில் அனுமனை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் ,வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வதுண்டு. அத்துடன் நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். அந்த வகையில் இன்று அனுமன் ஜெயந்தி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இன்று அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். பொரி, அவல் ,கடலை ,சர்க்கரை ,வெண்ணை, தேன், பானகம், இளநீர் ,பழங்கள் ,வாழைப்பழம் போன்றவைகளை வைத்து வழிபடலாம்.இந்நிலையில் அனுமன் ஜெயந்தியொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன் காரணமாக அதிகாலை முதலே திரளான பக்தர்கள் அனுமனை தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். அத்துடன் சிறப்பு பூஜையில் அமைச்சர்கள் சேகர்பாபு , மதிவேந்தன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.