ஹன்சிகா பெயரில் பரவும் அந்தரங்க வீடியோ..!!
சமூக வலைதளங்களில் எது எப்போது டிரெண்டாகும், எது வைரலாகும் என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினம். அந்த வகையில், தற்போது நடிகை ஹன்சிகா மோத்வானியின் பெயர் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. Reddit தளத்தில் அவரது அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருப்பதாகக் கூறப்படும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதுகுறித்து ஹன்சிகா தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
வைரலாகும் தகவல் உறுதியானதில்லை!
தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உண்மையிலேயே ஹன்சிகா மோத்வானியின் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களா, என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. Reddit அல்லது X தளங்களில் வெளியாகும் பதிவுகள் மட்டுமே அவற்றின் நம்பகத்தன்மையை நிரூபிக்காது.
ஹன்சிகா மோத்வானியின் பெயரில் அந்தரங்கப் புகைப்படங்கள் இணையத்தில் பரவுவது தொடர்பான சர்ச்சை ஏற்கெனவே எழுந்துள்ளது. அவரது 50-வது திரைப்படமான 'மஹா' படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவரது பெயருடன் சில தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிய அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தின. அப்போது, அந்தப் புகைப்படங்களில் இருப்பது தான் இல்லை என்றும், அவை மார்ஃபிங் செய்யப்பட்டவை என்றும் ஹன்சிகா விளக்கம் அளித்திருந்தார். மேலும், தனது மொபைல் போன் மற்றும் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தனது பெயரில் வரும் சந்தேகத்திற்குரிய தகவல்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

