கணவரை பிரிந்தார் ஹன்சிகா மோத்வானி

 
Hansika Motwani officially divorced from husband Sohael Khaturiya after four years of marriage

கணவர் சோஹைல் கதூரியாவை பிரிந்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

Are Hansika Motwani And Sohael Kathuriya Heading For Divorce After 2 Years  Of Marriage? Here's What We Know | Republic World

கணவர் சோஹைல் கதூரியாவை பிரிந்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி. 2022ல் இவர்களின் திருமணம் நடந்த நிலையில் 4 வருடங்களில் கணவரை பிரிந்தார் ஹன்சிகா. மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், தம்பதியினர் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். ஜூலை 2, 2024 முதல் அவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர், பின்னர் விவாகரத்து செய்தனர். 2025ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில், மும்பை குடும்ப நல நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கியுள்ளது. மேலும், ஹன்சிகா தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் எதையும் கேட்கவில்லை என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.