டிசம்பர் முதல் வாரத்தில் அரையாண்டுத் தேர்வுகள்!!

 
school

 தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிச.7-ம் தேதி தொடங்குகிறது.
 

school

இந்நிலையில் தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 -டிச. 22ம் தேதி வரையும், 6-10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.11- டிச.21 ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

School Education

தலைமை ஆசிரியர்கள் தேர்வுக்கு முந்தைய நாளில் அதற்கான வினாத்தாள்களை  எமிஸ்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்வதில் இடர்பாடு ஏற்பட்டால் 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.