பாஜகவுடன் மோத வேண்டாம்! திருமாவளவனுக்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை

 
ஹெச் ராஜா திருமாவளவன்

அனாவசியமாக திருமாவளவன் பாஜகவுடன் மோத வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

H Raja: Tamil Nadu BJP leader H Raja calls Kanimozhi 'illegitimate' child  of Karunanidhi | Puducherry News - Times of India

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் இன்று பைரவருக்கு நடைபெற்ற யாக பூஜையில் பா.ஜ.கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா, “திருமாவளவன் பா.ஜ.கட்சியோடு அனாவசியமாக மோத வேண்டாம். இருக்கின்றதும் போய் விடும். 1,000 ஓட்டில் வெற்றி பெற்ற அவர் ஒரு வெகுஜன விரோதி. திருமாவளவன் தன்னை திருத்தி கொண்டு, தனக்கு கீழ் உள்ளவர்களையும் திருத்த வேண்டும்.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 2,000 கோயில்களை புனரமைக்க போவதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. திமுக அரசால் கோவில்களை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்றால் பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும். பழமையான மானம்பாடி கோயில் விக்ரகங்கள் சிதறி கிடப்பதை போல ஆட்சியாளர்களின் குடும்பங்களும்  சிதறி நாசமாகி போவார்கள்” என  சாபம் கொடுத்துள்ளார்.