ஈரோடு தேர்தல் ஜனநாயகத்திற்கு அவமானம்- ஹெச்.ராஜா

 
h

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு நேரில் வந்து தாயாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

Image

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். இந்நிலையில் கடந்த 4 தினங்களாக ஓ .பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அரசியல் பிரமுகர்கள் நாள்தோறும் அவரது இல்லத்தில் வந்து துக்கம் விசாரித்து  ஆறுதல் தெரிவித்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசீய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மற்றும் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ்-ன் தாயார் பழனியம்மாள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி தாயாரின் மறைவிற்கு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறி சென்றனர்.

Image

அதன்பின் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பாக பாஜகவில் திரிபுராவில் வெற்றி, நாகாலந்து மாநிலத்தில் முன்னணி பெற்றதை கொண்டாடும் விதமாக இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதில் கலந்துகொண்ட பின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, “ இந்தியாவில் வட, கிழக்கு மாநிலங்களில் திரிபுராவில் பா.ஐ.க., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் என்பது ஒரு கேலிக்கூத்து. ஆடு, மாடுகளை போல மக்களை பட்டியில் அடைத்து பணம் கொடுத்து நடைபெற்றதாக சமூக வளைதளங்களில் வந்துள்ளது. தேர்தல் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஈரோட்டில் வெற்றி பெற்றது பணநாயகம், ஜனநாயகத்திற்கு ஒரு அவமானம்” எனக் கூறினார்.