குற்றங்களை தான் தடுக்க முடியவில்லை...நோய் பெருக்கத்தை கூடவா தடுக்க இயலாது? - ஹெச்.ராஜா கேள்வி

 
h.raja h.raja

ஏற்கனவே மருத்துவர் பற்றாக்குறைகளால் பரிதவிக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகளை அதிகரிப்பதுதான் திராவிட மாடலோ? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, தமிழகத்தில் பெருகிவரும் குற்றங்களைத்தான் தங்கள் 
திமுக  அரசு தடுப்பதில்லையானால் டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களின் பெருக்கத்தைக் கூடவா தடுக்க இயலாது?  ஒருவேளை, ஏற்கனவே மருத்துவர் பற்றாக்குறைகளால் பரிதவிக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகளை அதிகரிப்பதுதான் திராவிட மாடலோ?


சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உங்கள் மகனின் உதய விழா கொண்டாட்டத்திற்கு ஈடுபாடு காட்டிவரும் நிலையில், சிக்கன்குனியா பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி தமிழக மக்களின் நலனைக் காக்க தாங்களாவது ஏதும் முயற்சிகள் எடுப்பீர்களா ? அல்லது மகன் பிறந்த நாள் விழாவை விட தமிழக மக்களின் உயிரா பெரிது என தாங்களும் அடுத்த உதய விழாவிற்கு தயாராகப் போகிறீர்களா? என குறிப்பிட்டுள்ளார்.