தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ? - ஹெச்.ராஜா கேள்வி

 
h.raja

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்தில் NIA வந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வரை தமிழக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த புகாரில் என்ஐஏ நடவடிக்கை எடுத்தது. இதேபோல் சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் என்ஐஏ சோதனை நடைபெற்றது. 

nia

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்தில் NIA வந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வரை தமிழக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்திலிருந்து  ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அவை யாருக்கு எதிராக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தது என தெரிய வேண்டும் . தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.