டெல்லி கணேஷ் இழப்பு கலைத்துறைக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும் - ஹெச்.ராஜா
குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. கடந்த 3 நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குணச்சித்திர நடிகர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார் என்கிற செய்தி வருத்தமளிக்கிறது.
— H Raja (@HRajaBJP) November 10, 2024
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பன்மொழி திரைப்படங்களில் நடித்த ஆகச்சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர். அவரது இழப்பு கலைத்துறைக்கு ஈடுசெய்ய இயலாத… pic.twitter.com/jyk4h1QiuX
இந்த நிலையில், டெல்லி கணேஷ் மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். குணச்சித்திர நடிகர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார் என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பன்மொழி திரைப்படங்களில் நடித்த ஆகச்சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர். அவரது இழப்பு கலைத்துறைக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி என குறிப்பிட்டுள்ளார்.


