ஒரு கண்ணில் வெண்ணெய்! ஒரு கண்ணில் சுண்ணாம்பு! இதுதான் திராவிட மாடலா? - ஹெச்.ராஜா கேள்வி
இந்து கோவில்களில் பக்தர்களிடம் இருந்து வசூல் செய்யும் திமுக அரசு, இஸ்லாமிய வழிபாட்ட்டு தலத்திற்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டையை கட்டணமின்றி இலவசமாக வழங்குவதுதான் மதச்சார்பின்மையா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வக்ஃப் வாரிய கோரிக்கையை ஏற்று நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 கிலோ சந்தனக்கட்டையை இலவசமாக வழங்கும் தமிழக அரசு, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களில் கடவுளை தரிசிக்க வரும் இந்துக்களிடம் தரிசன கட்டணம்! அர்ச்சனை கட்டணம்! அபிஷேக கட்டணம்! கோயிலுக்கு வெளியே வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்த கட்டணம்! கோயிலில் அன்னதானம் வழங்க அன்னதான நன்கொடை என்கிற பெயரில் பக்தர்களிடம் வசூல் செய்கிறது. கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள கோயில்களில் திருப்பணி நன்கொடை என்கிற பெயரில் பக்தர்களிடம் வசூல் செய்கிறது.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய கோரிக்கையை ஏற்று நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 கிலோ சந்தனக்கட்டையை இலவசமாக வழங்கும் தமிழக அரசு..!!
— H Raja (@HRajaBJP) November 20, 2024
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களில் கடவுளை தரிசிக்க வரும் இந்துக்களிடம் தரிசன கட்டணம்! அர்ச்சனை… pic.twitter.com/sG00CzAIk8
இந்து கோயில்களில் பல்வேறு கட்டணங்கள் மூலம் பக்தர்களின் பணத்தை நூதனமாக சூறையாடும் தமிழக அரசு, இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலத்திற்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டையை கட்டணமின்றி இலவசமாக வழங்குகிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்! ஒரு கண்ணில் சுண்ணாம்பு. இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் மதசார்பின்மை? என குறிப்பிட்டுள்ளார்.