நிகழ்ச்சி மேடையில் மழுங்கி விழுந்த எச்.ராஜா..! ஐசியூவில் சிகிச்சை! தற்போதைய நிலை என்ன..?

 
1 1

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், இன்று சென்னை கிண்டியில் NDTV ஊடகத்தின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த ஊடக நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை அதில் பகிர்ந்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தேர்தல் பரப்புரை செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றிருந்தார். இந்நிலையில், திடீரென அங்கு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழப்போன மேடையில் இருந்தவர்கள் சுதாரித்துப் பிடித்தனர்.அதனைத் தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்தாலும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா, அப்போலோ மருத்துவமனையில் சீராக நலம் பெற்று வருகிறார். விரைவான குணமடைவிற்காக அனைவரின் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.