எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதை சிலர் ரசிக்கிறார்கள்: ஜி.வி.பிரகாஷ்

 
karthi with gv

11 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் அண்மையில் அறிவித்திருந்தனர். 

1

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். "சைந்தவியும் நானும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்தத் தருணத்தில், எங்கள் தனி மனித சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் இருவருக்கும் இதுதான்  சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு எங்களுக்கு உதவியாக இருக்கும்” எனப் பகிர்ந்துள்ளனர்.  



இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “யூடியூப் சேனல்கள் தங்களது சொந்த அனுமானங்களின் அடிப்படையில் எழுதும் கதைகளில் உண்மையில்லை. அதிலும் சிலர் அவர்களது சொந்த கற்பனை கதைகளின் மூலம் எங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களை ரசிக்கிறார்கள். இந்த கடினமான காலங்களில் எங்களோடு நின்று ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.