காங்கிரஸ் அலுவலகத்தில் 'குட்கா'- கிலோ கணக்கில் பறிமுதல்
Jun 7, 2026, 15:43 IST1780827229819
ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் 2.80 கிலோ எடையிலான 104 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்புள்ள பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான காமராஜர் அரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு போலீஸார் சோதனை செய்தபோது, 2 கிலோ எடையுடைய 104 புகையிலை பாக்கெட்டுகள் சிக்கின. இதனை பதுக்கி வைத்த, மேல அடையவளஞ்சான் வீதியைச் சேர்ந்த நடராஜன் என்ற பாதயாத்திரை நடராஜனை போலீஸார் கைது செய்தனர். நடராஜன், காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீரங்கம் கிளைச் செயலாளராக உள்ளார். அரசியல் கட்சி அலுவலகத்திலேயே போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

