குட்கா முறைகேடு- சி.விஜயபாஸ்கர் மனு வாபஸ்

 
விஜயபாஸ்கர்

குட்கா முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி தவெக புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அதனைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குட்கா முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு, வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சட்டப் பிரிவுகளை எதிர்த்தும், குற்றவழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதிகள், இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சட்டப் பிரிவை எதிர்த்து முறையாக மனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக விஜயபாஸ்கர் தரப்பில் கூறப்பட்டதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.