"வன்னியர்களுக்கு துரோகம் இழைத்த அன்புமணி! மகளுக்காக துடிக்கும் ராமதாஸ்"- ஜெ.குரு மகள்
வன்னியர் மக்களுக்கு துரோகம் இழைத்த அன்புமணிக்கு எதிராக , வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் பிரச்சாரம் அமையும் என சேலத்தில் ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய நிறுவனத் தலைவர் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.
ஜெ. குரு பாட்டாளி மக்கள் கட்சியின் அறிமுக கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவரான ஜெ. குருவின் மகளான குரு. விருதாம்பிகை கட்சியின் கொடியை அறிமுக படுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்னியர்களுக்கு எதிராக செயல்படும் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி , கூட்டணி வைத்து இருப்பது கண்டத்திற்கு உரியது. வன்னியருக்கு 10.5 சதவீகிதம் தருவதாக கூறி , தேர்தலுக்காக அவசரகதியில் கணக்கெடுப்பு நடத்தாமல் கொடுத்து ஏமாற்றிய பழனிசாமியுடன் கூட்டணி வைத்திருப்பது கண்டனத்திற்குரியது. முன்னுக்கு பின் முரணாக வன்னியருக்கு இந்த பகுதியில் ஆதரவாகவும் , டெல்டா மாவட்டங்களுக்கு சென்று வன்னியாருக்கு எதிராகவும் பேசும் பழனிசாமியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏற்று கொள்ள முடியாது. அன்புமணி மீது ஊழல் வழக்கு இருப்பதால் பாஜவிற்கு பயந்து அவர்கள் சொல்லும்படி நடந்து கொண்டு, ஆர்எஸ்எஸ் - ன் அடிமையாக செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.
இதே போன்று வன்னியர் நலன் என்று கூறி தொடர்ந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அன்புமணியின் உண்மை முகத்தை வெளிப்படுத்திட இன்று முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த விருதாம்பிகை , வன்னியர் அறக்கட்டளையை ராமதாசும் , அன்புமணியும் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்தி வருவதை மக்களிடையே எடுத்துரைப்போம் என்றார். வன்னியர் அறக்கட்டளையை தனது மனைவி சரஸ்வதி பெயரிலும் , பின்னர் தனது பெயருக்கும் மாற்றிய ராமதாஸ் வன்னிய சமுதாய மக்களிடமே , ஒரு சீட்டுக்கு மூன்று கோடி ரூபாய் நன்கொடை வசூலிக்கின்றனர் என குற்றம் சாட்டினார். எனவே இந்த சட்டமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் , அன்புமணி வன்னிய சமுதாய மக்களுக்கு கிடைத்த துரோகத்தையும் , அவர் செய்த ஊழலையும் வெளிப்படுத்துவேன் என்றார். மேலும் சௌமியா அன்புமணி நிற்கும் சட்டமன்ற தொகுதியில் தானோ அல்லது தன் கட்சியை சார்ந்தவர்களையோ நிற்க வைத்து தோற்கடிப்பேன் என்றும் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீட்டுக்காக போராடிய போது, அதிமுக ஆட்சியில் தான் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள், வன்னியருக்கு பல நன்மைகள் செய்திருப்பதாகவும் குறிப்பாக இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த 21 குடும்பத்திற்கும் நிதி வழங்கியதோடு, அந்த குடும்பத்தாருக்கு பென்ஷன் தொகையை வழங்கி உள்ளார். மேலும் 20 சதவீத இட ஒதுக்கீட்டையும் ஒதுக்கி தந்தவர் கலைஞர். தற்போதைய முதலமைச்சர் வன்னிய சமுதாயத்திற்கு போராடிய இட ஒதுக்கீடு போராளிகளுக்கு மணி மண்டபம் அமைத்துக் கொடுத்தார். எனவே தான் ப்வன்னிய மக்களை பயன்படுத்தி வளர்ந்து விட்டு , அந்த மக்களுக்கு எதிராக துரோகங்களை செய்து வரும் அன்புமணியின் ஆதரவாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் , அன்புமணியின் மனைவி சௌமியா எங்கு போட்டியிட்டாலும் அவரை தோற்கடிப்பது தனது குறிக்கோள் என்றும் உறுதிப்படுத்த தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விடுதாம்பிகை விஜய் அவர்களின் கூட்டத்திற்கு வருபவர்கள் வெறும் ரசிகர்கள் தான். சமத்துவம் , சமூக நீதி என்று கூறிவரும் விஜய் ஏன்? வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு குரல் கொடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். விஜய் தனது திரைப்படத்தில் தவறான பழக்கத்தை கற்றுக் கொடுத்தவர். புகை பிடிப்பது போதை போடுவது என படத்தில் நடித்துவிட்டு தற்போது இளைஞர்களை அழைப்பது நியாயமா? என்றும் கேள்வி அனுப்பினார்.


