ஆவடியில் சிஆர்பிஎஃப்-ல் பயிற்சியின் போது பாந்த குண்டு... அருகிலுள்ள வீட்டின் மேற்கூரையை துளைத்ததால் பரபரப்பு..

 
ஆவடியில் சிஆர்பிஎஃப்-ல் பயிற்சியின் போது பாந்த குண்டு...  அருகிலுள்ள வீட்டின் மேற்கூரையை துளைத்ததால் பரபரப்பு..


ஆவடி மிட்டனமல்லி அருகே சி.ஆர்.பி.எஃப் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வெளியேறிய துப்பாக்கி குண்டு ஒன்று , அருகிலுள்ள வீட்டின் சிமெண்ட் ஓட்டை உடைத்துகொண்டு உள்ளே பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவடி அடுத்த மிட்டனமல்லி MC ராஜா தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ் குமார்.  பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு பணி முடித்து வந்து வீட்டில் தூங்கியிருக்கிறார்.  பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ கண்ணாடி உடைந்து ம், வீட்டின் மேற்கூரை சிமெண்ட் ஓட்டில்  துளை ஏற்பட்டு காணப்பட்டுள்ளது.  இதனையடுத்து வீட்டில் தேதி பார்த்தபோது, துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டில் இருந்துள்ளது.  அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த  ராஜேஷ்குமார்,  உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

firing bullets

 பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜி தலைமை யிலான காவலர்கள் ,  துப்பாக்கி குண்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  அதில் அருகில் சிஆர்பிஎஃப் பயிற்சி வளாகத்தில் இருந்து வந்த குண்டு என்பது தெரியவந்துள்ளது.  ஆவடி துணை ராணுவ பயிற்சி முகாமில்,  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது துப்பாகி சுடும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியின்போது ஒரு வீரரின் குண்டு தவறி அருகாமையில் உள்ள அந்த வீட்டின் மேற்கூரையை துளைத்திருக்கிறது.  

ஆவடியில் சிஆர்பிஎஃப்-ல் பயிற்சியின் போது பாந்த குண்டு...  அருகிலுள்ள வீட்டின் மேற்கூரையை துளைத்ததால் பரபரப்பு..

பயிற்சி தளத்தில் இருந்து துப்பாக்கி குண்டுகள் வெளியேறாதவாறு முழுமையாக பாதுகாக்கப்படும், இருந்தபோதிலும் தற்போது குண்டு எவ்வாறு வீட்டின் மேற்கூரையை துளைக்கும் அளவிற்கு சென்றிருக்கும் என  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அல்லது  வேறு யாரேனும் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு, அந்த குண்டு  இங்குவந்து விழுந்ததா என்கிற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 ஆண்டுக்கு பிறகு 2வது முறை இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.