அரசு பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் பறிமுதல்! நெல்லையில் பரபரப்பு

 
பேருந்து

சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நேற்று இரவு நெல்லை நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது பேருந்தை சுத்தம் செய்யும்போது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுத்தம் செய்யும்போது பயணி படுக்கையின் அடியில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் இருந்ததை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 இதுகுறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல்துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.