கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி அருகே 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி முடிந்து சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமியை, வாயை பொத்தி இளைஞர் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து குற்றவாளியை தேடி வந்த போலீஸார், அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர், மேலும் குற்றவாளியை அடையாளம் கண்டு தகவல் சொல்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பரிசு அறிவித்து தொலைபேசி எண்ணையும் வெளியிட்டிருந்தது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மின்சார ரயிலில் செல்வது போன்ற புகைப்படம் வெளியானது.
இந்நிலையில் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 13 நாட்களுக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன் எனக் கூறப்படுகிறது. ரயில் நிலையத்தில் வைத்து பிடிக்கப்பட்ட அந்த நபரிடம், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று அணிந்திருந்த அதே நிறத்தில் உள்ள டீ-சர்டில் இருந்த மேற்குவங்க நபரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


