பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த மாணவிகள் - அதிர்ச்சியூட்டும் வீடியோ!!

 
rr

பள்ளி வேன் ஒன்றிலிருந்து இரண்டு மாணவிகள் கீழே விழுந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ff

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான வேனில் மாணவர்கள் ஏற்றிக்கொண்டு சென்றபோது,  எதிர்பாராத விதமாக வேனின் பின்புற கதவு திறந்ததில் இரண்டு மாணவிகள் சாலை நடுவே விழுந்தனர்.  இதில் இருவரும் காயமடைந்தனர்.  இதையடுத்து அப்பகுதி மக்கள் மாணவிகளை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.


 இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. பின்பக்க கதவு சரியாக மூடப்படாத காரணத்தால் மாணவிகள் வெளியே விழுந்ததாக தெரிகிறது.