கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து!
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவருக்கு கத்திக்குத்து - 4 பேரிடம் விசாரணை. தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மருத்துவரை தாக்கியதாக போலீசார் தகவல். தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் அனுமதி. pic.twitter.com/C1EycwevWT
— Mahalingam Ponnusamy (@mahajournalist) November 13, 2024
புற்று நோய் துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்துகுத்து விழுந்த சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கத்தி குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.