#JUSTIN இனிப்பு, காரம் தயாரிப்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

 
s s

பண்டிகை காலங்களில் இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

Top 10 Diwali Snacks in Tamil [10 தீபாவளி கார வகைகள் எளிமையாக செய்வது  எப்படி? சரியான விளக்கத்துடன்]

  • அதன்படி, பேக்கிங் செய்யப்படும் உணவு பொட்டலங்கள் உணவு பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 
  • உணவு பொருட்களை கையாள்பவர்கள் வெற்றிலை, புகையிலை மெல்லுதல், புகைப்பிடித்தல், எச்சில் உமிழ்தல் போன்ற செயல்பாடுகளை உணவு தயாரிக்கும் வளாகத்தில் அனுமதிக்க கூடாது. 
  • பணியாளர்கள் மற்றும் உணவை கையாளுபவர்கள் கண்டிப்பாக தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.
  • இனிப்பு காரம் தயாரிப்புக்கு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தரமான எண்ணெய்/ நெய் பயன்படுத்த வேண்டும். 
  • உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெறாமல் உணவு வணிகத்தில் ஈடுபடுவது குற்றம்
  • பால் பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும், பால் அல்லாத இனிப்பு பொருட்களில் தனித்தனியே பொட்டலமிட வேண்டும். 
  • உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440-42322 என்ற வாட்ஸப் எண்ணில் தெரிவிக்கலாம்.