GST 2.0 : விலை குறைய உள்ள கார்களின் மாடல்கள் இதோ..!

 
1 1

மாருதி சுசூகி சுவிப்ட் & டிசைர்
 

பிரபல மாடல்களான இந்த கார்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், இதன் விலை ரூ.60 ஆயிரம்( தோராயமாக) குறையக்கூடும்

மாருதி சுசூகி ஆல்டோ கே 10
 

இந்தியாவில் பலராலும் வாங்கக்கூடிய மாடலாக இந்த மாடல் உள்ளது. இது தனிநபர் பயன்பாட்டுக்கும், டாக்சி சேவைக்கும் பயன்பட்டு வருகிறது. இக்கார் தற்போது ரூ.4.23 லட்சம் ( ஷோ ரூம் விலை) அளவுக்கு விற்பனை ஆகிறது. இது ரூ.3.81 லட்சம் ஆக குறைய வாய்ப்பு உள்ளது.

மாருதி சுசூகி எஸ் - பிரஸ்ஸோ
 

மாருதியின் மற்றொரு பிரபல மாடலான இக்காரின் விலை ரூ.4.26 லட்சத்தில் இருந்து ரூ.3.83 லட்சம் ஆக விலை குறையக்கூடும்.

மாருதி சுசூகி சுவிப்ட் & டிசைர்
 

பிரபல மாடல்களான இந்த கார்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், இதன் விலை ரூ.60 ஆயிரம்( தோராயமாக) குறையக்கூடும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
 

இக்கார் தற்போது ஷோரூம்களில் ரூ5.98 லட்சம் ஆக விற்பனை ஆனது. இனிமேல் ரூ5.51 லட்சம் ஆக விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டியாகோ
 

மேல்நோக்கி திறக்கும் கதவுகளை கொண்ட இக்காரின் விலை ரூ.5.65 லட்சத்தில் இருந்து ரூ5.15 லட்சம் ஆக விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

ரெனால்ட் கிவிட்
 

மாருதி சுசூகி ஆல்டோ கே 10 மாடல் கார்களுக்கு நேரடி போட்டியாளராக விளங்கும் ரெனால்ட் கிவிட் கார்களை பிரெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. இக்காரின் விலையில் ரூ.40 ஆயிரம் குறையக்கூடும்.
 

டாடா நெக்சான்
 

இந்தியாவில் மிகவும் பிரபலமான எஸ்யுவி காரான டாடா நெக்சான் விலை ரூ.80 ஆயிரம் குறைக்கூடும்
 

ஹூண்டாய் கிரெட்டா
 

இந்த மாடல் காருக்கு முதலில் 29 சதவீத வரி மற்றும் 15 சதவீதம் செஸ் வ என 43 சதவீதம் விதிக்கப்பட்டது. தற்போது, இது 40 சதவீதம் என்ற வரம்பில் வந்துள்ளதால் அதன் விலை சிறிதளவு குறையக்கூடும்.
 

மஹிந்திரா தார்
 

மிகவும் பிரபலமான எஸ்யுவி கார்களில் ஒன்றான இக்காருக்கு, அதன் வகையை பொறுத்து 45 முதல் 50 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இக்கார் 40 சதவீத வரி வரம்பில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
 

டொயோட்டா இன்னோவா கிறிஸ்டா
 

இக்காருக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 22 சதவீத செஸ் என 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. தற்போது இக்காரும் 40 சதவீத வரம்பில் கொண்டு வரப்பட்டு உள்ளது.