இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15 விண்ணில் பாய்ந்தது!

 
gslv

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15, NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15, இன்று (ஜன.29) காலை 6.23 மணிக்கு NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது. NVS-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.  

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து, NVS-02 என்ற 2,250 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் ரக செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது. 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.