குரூப் 1 தேர்வு முடிவுக்கு தடை கோரிய வழக்கு : டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதிலளிக்க உத்தரவு..

 
madurai high court

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுக்கு தடை கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி செயலாளரின் அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமண குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத்தேர்வை எழுதியுள்ளார்.  முதல் நிலை தேர்வு முடிந்து பத்து நாட்களுக்குப் பிறகு 2022 நவம்பர் 28ஆம் தேதி உத்தேச வினா விடை வெளியானது.  

tnpsc

அந்த வினா விடையில் ஏதேனும் தவறுகளோ, மாற்றங்களோ இருந்தால்  அது குறித்து ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 19 வினாக்களுக்கு விடை தவறாக இருந்துள்ளது. அதனை ஆதாரத்துடன் குறிப்பிட்டு  2022 டிசம்பர் மாதம் 5ஆம் தேதி  ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் தன்னுடைய ஆட்சேபனைகளுக்கு வல்லுனர் குழு எந்த பதிலும் வழங்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

வல்லுனர் குழுவின் இறுதி தேர்வு முடிவு வினா விடை பட்டியலை வெளியிட்டு,  அதன்பின் குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியிட வேண்டும் என்றும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை, இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க டிஎன்பிஎஸ்சி  செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.