3 நாட்களில் தரைதட்டிய கப்பல் மீட்கப்படும் : நிர்வாகம் அறிவிப்பு

 
tt

நீராவி இயந்திரங்களை ஏற்றிவந்த கப்பல் தரைதட்டிய  நிலையில் கப்பல் 3 நாட்களில் மீட்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. 

tn

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 5 மற்றும் 6வது அணு உலைக்கான நீராவி இயந்திரங்களை ஏற்றி வந்த இழுவை கப்பல் தரை தட்டி நின்றது. ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 300 டன் எடையுள்ள இரண்டு ஜெனரேட்டர்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த ஜெனரேட்டர்கள் இழுவை கப்பல் மூலம் கடல் மார்க்கமாக கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்,   திடீரென காற்றின் வேகம் அதிகரித்ததால், ரோப் கயிறுகள் அறுந்து  சில கிலோமீட்டர் கப்பல் இழுத்துச் செல்லப்பட்டு தரை தட்டி நின்றது.

tn

இந்நிலையில் நெல்லை கூடங்குளம் அருகே கடலில் தரை  தட்டிய கப்பல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீட்கப்படும்.  கப்பலில் உள்ள ஜெனரேட்டரை வேறு கப்பலுக்கு மாற்றி கரைக்கு கொண்டு வரும் பணி தொடர்ந்து நடக்கிறது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.  கடந்த இரண்டு நாட்களாக கப்பலை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் மேலும் 3 நாட்கள் ஆகும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.