வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்த புதுமாப்பிள்ளை - திருமணமான சில மணிநேரத்தில் நேர்ந்த சோகம்!!!

 
Marriage

சென்னை பெரவள்ளூர் கே சி கார்டன் 6வது தெருவை சேர்ந்தவர் லோகேஷ்.  இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் திருச்சியை சேர்ந்த ராஜலக்ஷ்மி என்ற பெண்ணுடன் இவருக்கு நிச்சயம் செய்யப்பட்டு கடந்த 9ம் தேதி திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.  

marriage

திருமணம் முடிந்த கையோடு பெரவள்ளூரில் உள்ள மணமகன் லோகேஷ் வீட்டிற்கு உறவினர்கள் வந்தனர்.  மணமக்கள் ஒரு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மணமகன் லோகேஷுக்கு வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியது. இதையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார்.  

death

இதனால் உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதை கேட்ட லோகேஷ் குடும்பத்தினர்  மற்றும்  மணப்பெண் அவரது கதறி அழுதுள்ளனர்.  இது தொடர்பாக திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அத்துடன் மணமகன் லோகேஷ்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே மணமகள் ராஜலக்ஷ்மியின் முதல் கணவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது 2ஆவது கணவரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.