தேசிய வாக்காளர் தினம் - ஜி.கே.வாசன் வாழ்த்து

 
gk vasan

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஜி.கே.வாசன்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

GK Vasan

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் துவங்கப்பட்ட ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. வாக்காளர்களுக்கிடையே விழப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. வாக்காளர் ஒவ்வொருவரும் இந்தியாவை கட்டமைக்கும் தூண்கள். அவர்கள் தம் வாக்கின் மூலம் தாம் விரும்பும், சிறந்த, வலுவான, நேர்மையான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் ஆட்சியை ஏற்படுத்த முடியும். அதற்கான அதிகாரம் வாக்காளர்களிடம் மட்டுமே உள்ளது.

election commision

இந்திய ஜனநாயக நாட்டில் வாக்காளருக்கு அளித்துள்ள அதிகாரத்தை முறையாக, யாருடைய கட்டுப்படுத்துதல் இல்லாமல், நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம். பண பலம், ஆள்பலம், அதிகாரப் பலத்திற்கு ஆட்படாமல் சிறந்த நிர்வாகத்தை, நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பவருக்கு நம்முடைய வாக்கை அளிக்க வேண்டும்.
இளைஞர்கள் தங்களை வாக்காளர்களாக இணைந்துக்கொண்டு வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்க வேண்டும். இளைஞர் சக்தி மகத்தான சக்தி, வருங்காலத்தை உருவாக்கும் சக்தி, அவற்றை ஆக்க பூர்வமாக பயன்படுத்தி, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தங்களின் வாக்கின் மூலம் ஊழலற்ற, இந்திய தேசத்தை வல்லரசாக்க கூடியவர்களையே தேர்ந்தெடுக்க அயராது பாடுபடுவோம். ஜனநாயகம் காப்போம் வெற்றிபெறுவோம். வாக்களர்கள் அனைவருக்கும் இந்நாளில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தேசிய வாக்காளர் தின நல் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.