பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 
mk stalin


பொதுத்தேர்வு மாணவர்கள் உறுதியுடன் அணுக வேண்டும் என  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் நடப்பாண்டு 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு (மார்ச் 13)  நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. 11ம் வகுப்புக்கு  14-ந்தேதி  முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு  ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.   இந்தில்   நாளை ( திங்கள் கிழமை) தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை  பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதுகின்றனர்.  

தேர்வு

இந்த நிலையில்,பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பேரன்பிற்குரிய 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் அன்பான வணக்கம். அனைவரும் தேர்வு டென்ஷனில் இருக்கிறீர்களா? ஒரு டென்ஷனும்வேண்டாம்.. எந்த பயமும் வேண்டாம். இது ஜஸ்ட் இன்னொரு தேர்வு அவ்வளவுதான்..  அந்த முறையில் தான் இந்த தேர்வை நீங்கள் அணுக வேண்டும்.   எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்து தான் வரப்போகிறது.   ஆகையால் உறுதியுடன் தேர்வு எதிர்கொள்ளுங்கள்..  

stalin

 உங்களுக்கு தேவையானது அனைத்தும் தன்னம்பிக்கையும் மனஉறுதியும் மட்டுமே..  தன்னம்பிக்கை  இருந்தாலே தேர்வில் பாதி வெற்றி பெற்று விடுவீர்கள்.. தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பதற்காக அல்ல.. உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது; உயர்த்தி விடுவது.   ஆகையால் மீண்டும் சொல்கிறேன் எந்தவித தயக்கமும் இன்றி தேர்வு எதிர்கொள்ளுங்கள்.   தேர்வை பார்த்து பயம் வேண்டாம்.   பாடங்களை ஆழ்ந்த படியுங்கள்; புரிந்து படியுங்கள்;  விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள்.   நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.   அந்த வெற்றிக்காக உங்களது பெற்றோரையும், ஆசிரியர்களையும் போல நானும் காத்திருக்கிறேன்;  முதல்வராக மட்டுமின்றி,  உங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்த்துகிறேன். All The Best" என்று கூறியிருக்கிறார்..