கர்நாடகா தேர்தல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 
tn

முதலமைச்சர் ஸ்டாலின் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ttn

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது.  இதில் பாஜக, காங்கிரஸ் ,மதசார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில் சுமார் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.  இந்த சூழலில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.  மாநிலம் முழுவதும் 36 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பக் கட்டம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையிலுள்ள நிலையில் அதை கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

ttn

இந்நிலையில் சோனியா,  ராகுல் காந்தி சிவக்குமார்,  மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா ஆகியோருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். 
அத்துடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே,  மூத்த தலைவர்கள் ஆகியோருக்கு தொலைபேசியில் முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.