வாகன ஓட்டிகளுக்காக சிக்னல்களில் பசுமை பந்தல் - சென்னை மாநகராட்சி அசத்தல்

 
tn

வெயில் தாக்கத்தால் சிக்னலில் வாகன ஓட்டிகள் சிரமப்படாமல் இருக்க சென்னை மாநகராட்சி மேற்கூரை அமைக்கிறது. 

tn

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கோடை காலத்தில் முக்கியமான அதிக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் சிக்னல் பகுதிகளில் வெயில் பிரச்னைகளில் இருந்து வாகன ஓட்டிகளை காக்க GCC சார்பில் ஐந்தரை மீட்டர் நீளத்தில் பச்சை நிற பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் முடிந்தவரை தண்ணீர் பானைகள் வைக்கப்பட உள்ளது.இந்தியாவில் 23 வகையான நாய்கள் இனப்பெருக்கம் செய்வதோ, இறக்குமதி செய்வதோ, சட்ட விரோதமாக விற்பனை செய்வதோ உள்ளிட்ட தடைகளை மத்திய அரசு கொண்டு வந்தது;அதற்கான இடைக்கால தடையை பெற்று சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

tn

நாய்க்கடி ஏற்பட்ட ஐந்து வயது குழந்தைக்கு ரேபிஸ் நோய் தொற்று உள்ளது என்பது தவறான தகவல், அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது; அந்த குழந்தைக்கு இன்று மதியம் அறுவை சிகிச்சை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.