செல்லப்பிராணிகள் சந்தைக்குத் தடை விதித்த சென்னை மாநகராட்சி
Nov 1, 2026, 11:01 IST1793511110752
சென்னை பிராட்வே மஸ்கான்சாவடியில் ஞாயிறு தோறும் நடைபெற்றுவந்த செல்லப்பிராணிகள் சந்தைக்கு மாநாராட்சி தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிராட்வே மஸ்கான்சாவடியில் ஞாயிறு தோறும் நடைபெற்றுவந்த செல்லப்பிராணிகள் சந்தைக்கு மாநாராட்சி தடை விதித்ததால் அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முறையான மருத்துவ பரிசோதனை, தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் விலங்குகள் விற்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், சுகாதார சீர்கேடு தொடர்பான புகார்கள் எழுந்ததால் செல்லப்பிராணிகள் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநாராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பரபரப்பான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

