திருவள்ளூரில் பெரும் சோகம்: பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் பரிதாப பலி!
Nov 27, 2026, 10:14 IST1795754670478
உதயநிதி பிறந்த நாளையொட்டி, திருவள்ளூர் வாணியன் சத்திரத்தில் திமுகவினர் வாழ்த்து பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேலே சென்ற உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், காரணி கிராமத்தைச் சேர்ந்த வேலன்,30, வாணியன் சத்திரத்தைச் சேர்ந்த வீரேந்தர்,22 ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த இளைஞர் ஆல்பர்ட், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இருவரும் திமுக ஒன்றிய செயலாளர் தங்கம் முரளியின் உறவினர்கள் ஆவர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

