"வேலியே பயிரை மேய்வதா?" - வளர்ப்பு மகளுக்கு காவலர் பாலியல் தொல்லை : வானதி சீனிவாசன் கண்டனம்!

 
vanathi srinivasan

முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:-

சென்னையில் தலைமை காவலர் ஒருவர் தனது வளர்ப்பு மகளையே மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. தந்தை-மகள் உறவு முறையின் உன்னதத்தையே கெடுத்த காவலரின் இழிவான இந்த செயல் வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் தொடர்ந்து பெண்கள் கண்ணீர் சிந்துவது தொடர்கதையாகி வரும் வேளையில் அவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவல் துறையை சேர்ந்தவரே வீட்டிலேயே தனது வக்கிர புத்தியை அரங்கேற்றியிருப்பது வெட்கக்கேடு.

தொடர்ந்து பெண்களுக்கு இதுபோன்று கொடுமைகள் நிகழ்ந்து வரும் வேளையில் சிங்கப்பெண் படையோ 100 நாட்கள் சாதனை என வழக்கமாக பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, சாதனை என்று கூறுவது எப்படி தகும்? அப்போது பெண்கள் பாதுகாப்பிற்கென இயங்கும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் பணிகள்தான் என்ன? தினமும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை அறியும் போது தெவெக ஆட்சியும் பெண்களின் பாதுகாப்பில் நிர்வாக திறமையை இழந்து விட்டது என்பது தான் உண்மை.

தினமும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை அறியும் போது தவெக ஆட்சியும் பெண்களின் பாதுகாப்பில் நிர்வாக திறமையை இழந்து விட்டது என்பது தான் உண்மை.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.