அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மன் மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது. ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம்,விழுப்புரம் ஆகிய 5 கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற இருந்தது. இந்த நிலையில், விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.