கனிமங்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி- செப்.30க்குள் வைக்க உத்தரவு
செப்டம்பர் 30-க்குள் கனிமங்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் AIS 140 GPS-ஐ MiMaS Portal-ல் இணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் AIS 140 (Automotive Industry Standard No.140) GPS கருவியை நிறுவி, அவற்றை MiMaS Portal-உடன் இணைப்பதற்கு கடந்த 31.08.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பல மாவட்டங்களில் தற்போது வரை சுமார் 10 சதவீத வாகனங்களுக்கு மட்டுமே AIS 140 GPS கருவி பொருத்தப்பட்டு MiMaS Portal-உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 30.09.2026-க்குள் கனிமங்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் GPS கருவி பொருத்தி, MiMaS Portal-உடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 30.9.2026க்குள் GPS கருவி பொருத்தி MiMaS Portal-ல் இணைக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே 1.10.2026 முதல் கனிமங்களை எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கப்படும். GPS கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு கனிமங்களை எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கப்படாது என கனிமவளத்துறை தெரிவித்துள்ளது.

