கெளதம சிகாமணி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

 
rb

கடந்த 2006 -2011 வரை திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , அவரது மகனும் தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கௌதம சிகாமணி மற்றும் இவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் செம்மண் குவாரிகளில் சட்ட விரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  

ponmudi

இந்த வழக்கானது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது . இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும், திமுக எம்.பி கௌதம சிகாமணி உள்ளிட்டவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.

gb

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணிக்கு எதிரான வழக்கு எம்.பி. , எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது/  சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை , சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி  உத்தரவிட்டுள்ளார்