அரசுப் பள்ளிகளில் ‘புத்தகப்பை இல்லா நாட்கள்’ திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டம்..?

கல்வி கற்க பள்ளி செல்லும் மாணவர்கள் அதிக எடையில் புத்தகப் பைகளை சுமந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கூட பைகளின் அதிக எடைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு பரிசீலித்து வருவதாக கேரள மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியுள்ளார்.
மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் மாநிலத்தில் பாடப் புத்தகங்கள் இரண்டு பிரிவுகளாக அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாணவர்களின் புத்தகப்பை அதிக எடையுடன் காணப்படுகிறது. எனவே மாதத்தில் நான்கு நாட்கள் அரசுப் பள்ளிகளில் ‘புத்தகப்பை இல்லா நாட்கள்’ திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் மாணவர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.