எல்பிஜி உற்பத்தியை இரட்டிப்பாக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

 
Gas

மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக இறக்குமதி சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டிலேயே போதிய எரிவாயு இருப்பை உருவாக்க மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நாட்டிலுள்ள 21 சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த அதிகபட்ச உற்பத்தி அளவுகள் தனித்தனியாக வகுத்து வழங்கப்பட்டுள்ளன.இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த எல்பிஜி உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 63,810 டன்களாக உயரும்.இது 2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் இரட்டிப்பாகும்.மேலும், இது நாட்டின் ஒட்டுமொத்த தினசரி சமையல் எரிவாயு நுகர்வில் சுமார் 70 சதவீத தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பழைய சுத்திகரிப்பு ஆலைக்கு மிகப்பெரிய உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த ஆலை நாளொன்றுக்கு 18,000 டன்கள் வரை எல்பிஜி உற்பத்தி செய்ய வேண்டும்.அதேபோன்று, அரசுக்கு சொந்தமான 18 பொதுத்துறை சுத்திகரிப்பு ஆலைகள் அனைத்தும் இணைந்து கூட்டு முயற்சியாக நாளொன்றுக்கு மொத்தம் 31,470 டன்கள் எல்பிஜி சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.