தினமலர் நாளேட்டின் மீது அரசு சட்டப்படியான நடவடிக்கை தேவை - திருமா வலியுறுத்தல்

 
thiruma

தினமலர் நாளேட்டின் மீது அரசு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

tn

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு  வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த சூழலில் பிரபல நாளிதழான தினமலரில் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.வீட்டில் சாப்பிட்டு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் 

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், எளியோரின் பிள்ளைகள் இருவேளை உணவு உண்பதையும் ஏற்கமனமில்லா எத்திப் பிழைக்கும் கும்பல். 

உடல் உள்ளம் யாவும் 
சனாதன நஞ்சில் 
ஊறிக் கொழுத்த 
சாதிஆதிக்கத் திமிர்.

கடைநிலையில் உழலுவோர் கடைத்தேறக் கூடாதென காலமெல்லாம் சதிசெய்த கழிசடைகளின் கழிவுப்புத்தி.

இது திமுக அரசின் திட்டத்துக்கு எதிரான 
காழ்ப்பு மட்டுமல்ல; எளியோருக்கு எதிரான வன்மம். 

இவர்களைக் கண்டிப்பது மட்டுமல்ல; சட்டப்படி தண்டிக்கவும் வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.